இந்திய அணியை ஆக்கிரமிக்கும் தமிழர்கள்

இந்திய அணியில் சமீப காலமாக விளையாட தெரிவாகும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு போவது தமிழக ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் கலக்கி வரும் அஷ்வின், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக அறிவிக்கபட்டதன் மகிழ்ச்சி அடங்குவதற்குள் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் தலைவராக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாட தெரிவான தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
அதேபோல் இவர்கள் மூன்று பேரும் களத்தில் தமிழில் மட்டுமே பேசிக்கொள்கிறார்கள். இவர்கள் தமிழில் பேசும் உரையாடல்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமயங்களில் இவர்கள் தமிழில் திட்டிக் கொள்வதும் வைரலாகி இருக்கிறது.