தானா சேர்ந்த கூட்டம் படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஆனால், படம் வெற்றியடைந்ததாக கூறி சூர்யா, விக்னேஷ் சிவனுக்கு கார் வழங்கியதாக நேற்று ஒரு சில புகைப்படங்கள் வந்தது.
இதை இணையத்தில் பலரும் ஷேர் செய்தாலும், சூர்யா விக்னேஷ் சிவன் மீது கொண்ட அன்பால் இதை செய்திருப்பார், ஆனால், ஒரு சிலர் இதை படம் வெற்றிக்காக என கூற, ஒரு சில விநியோகஸ்தர்களிடம் கடும் அதிருப்தி தான்.