இவ்வளவு பலன்கள் உள்ளதா? முருங்கைக் கீரை மருத்துவம் இதோ!

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
அதுவும் இந்த முருங்கைக் கீரையில் விட்டமின்கள், கலோரி, புரதம், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளது.
முருங்கைக் கீரையை எப்படி சாப்பிடலாம்?
  • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
  • முருங்கை இலையை மட்டும் எடுத்து அதனுடன் மிளகு சேர்த்து ரசம் வைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் உடம்பு ஏற்படும் வலிகள் குறையும்.
  • முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகைஉள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும், முடி நீண்டு வளரும், தோல் நோய்கள் நீங்கும்.
  • முருங்கை கீரையை சாப்பிடுவதன் மூலம் கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
  • முருங்கை கீரை சூப் வைத்து குடித்தால் ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகள் மற்றும், மலட்டுத் தன்மை போன்றவை குணமாகும்.