சாம்சுங் நிறுவனத்தின் இமாலய இலக்கு: வெற்றிக்கொடி நாட்டுமா?

சில தினங்களில் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான Galaxy S9 மற்றும் S9 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் இவ் வருட இறுதிக்குள் சுமார் 43 மில்லியன் Galaxy S9 மற்றும் S9 கைப்பேசிகளை விற்பனை செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த வருடம் 41 மில்லியன் Galaxy S8 மற்றும் S8 Plus ஆகிய கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு போட்டியாக தனக்கென ஒரு இடத்தினை உலகளவில் பிடித்துள்ள சாம்சுங் நிறுவனத்தினால் இது சாத்தியமாகுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி தனது புதிய கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் உலகளாவிய ரீதியில் விற்பனைக்காக அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.