பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மீது விரிவான விசாரணைகளை சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கிய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கள் மோதின.
இப் போட்டியில் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி 2 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெறணே்டிய தருணத்தில் இரு அணி வீரர்களுக்குமிடையில் சிறு வாக்குவாதமேற்பட்டது.
சிறிது நேரத்தில் குறித்த வாக்குவாதம் சமாதானமடைந்த நிலையில், பின்னர் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஆறு ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கையடைந்தது.
இதையடுத்து பங்களாதேஷ் அணி வீரர்கள் மைதானத்தில் வெற்றிக்களிப்பில் ஈடுட்டனர்.
இதையடுத்து பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவுகள் நொருக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை சர்வதேச கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணியின் இவ்வாறான செயற்பாடு தற்போது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.