ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் ‘திருவிளையாடல் ஆரம்பம், விக்ரமுடன் ‘கந்தசாமி’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவரும் ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை ஸ்ரேயா மறுத்திருந்தார்.
இந்த் நிலையில் மும்பையில் உள்ள ஸ்ரேயா வீட்டில் கடந்த 12ஆம் தேதியே ஸ்ரேயாவுக்கும் ஆண்ட்ரே கோஸ்சீவுக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், இந்த திருமணத்தில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஷபானா ஆஷ்மி ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஸ்ரேயா வீட்டின் எதிர்வீட்டில் குடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயா தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.