இதோ வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்

உலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில் மிக பிரபலமானது வாட்ஸ் அப்.
இந்த செயலியில் பல்வேறு புதிய அப்டேட் வந்த வண்ணமே உள்ளது.

தற்போது புதிய அப்டேட்டாக Group Description அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி இந்த புதிய அப்டேட் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த அம்சத்தை எப்படி இயக்குவது என்று பார்ப்போம்.

  • முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியை திறந்து, Description உருவாக்க வேண்டிய க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்து Group Info பகுதியில் Description ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • மேலும் க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை புதிதாய் சேர்க்கவோ அல்லது மாற்றியமைக்வோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்பின்பு க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை குறிப்பிட்ட க்ரூப்-ல் இருக்கும் அனைவராலும் பார்க்க முடியும்.