‘கெட்-அப்’ மாற்றிய கமல்ஹாசன்


நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது புதிய கெட்-அப்பிற்கு மாறியிருக்கிறார். ‘தேவர் மகன், விருமாண்டி’ ஸ்டைல் மீசையுடன் கமல்ஹாசன் இன்று தோற்றமளிக்கிறார். இன்று அவருடைய கட்சி அலுவலகத்திற்கு புதிய தோற்றத்தில் வந்த போது அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.கமல்ஹாசன் தற்போது புதிய படம் எதிலும் நடிக்க ஆரம்பிக்கவில்லை. ‘விஸ்வரூபம் 2’ படத்தை மட்டுமே முடித்துள்ளார். ‘சபாஷ் நாயுடு’ படத்தை அவர் தொடர்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அந்தப் படத்தின் வேலைகள் ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது.இருந்தாலும் கமல்ஹாசனின் இந்த புதிய மீசையுடனான தோற்றம் படத்திற்காகவா அல்லது சும்மா ஒரு மாற்றத்திற்காக வைத்திருக்கிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்