சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த அயர்லாந்து இளம்பெண் மாயம்: நடந்தது என்ன?

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த அயர்லாந்து இளம்பெண் கேரளாவில் மாயமாகியுள்ளார்.
அயர்லாந்தைச் சேர்ந்த இல்சி ஸ்க்ரொமென் என்ற இளம்பெண், தன் சகோதரி லிகா ஸ்க்ரொமென் (33) உடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் திகதியன்று இந்தியா வந்துள்ளனர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தர்மா ஆயுர்வேத வைத்தியசாலையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற வந்திருந்த சகோதரிகள், கடந்த 21-ஆம் திகதி முதல் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன்(14-3-2017) அன்று காலை 6 மணியளவில் யோகா பயிற்சிக்காக குறித்த பெண்ணின் சகோதரி அழைத்துள்ளார். ஆனால் தனக்கு தலைவலியாக இருப்பதாக கூறியுள்ள லிகா, தான் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதன்பின் 7.30 மணியளவில் அவர் அறைக்கு திரும்பிய போது அங்கிருந்த லிசா மாயமாகியுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு ஒருநாள் தாமதமாக தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வழக்கு பதிவு செய்து 4 நாட்களாக தேடி வருகின்றனர்.
விசாரணையின் போது, குறித்த பெண் மாயமான அன்று காலை தானாக ஆட்டோவில் ஏறி சென்றதாக விடுதி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரள அரசின் உதவியை நாடியுள்ள குறித்த பெண்ணின் சகோதரி கூறுகையில், “மன அழுத்தத்தில் இருந்த லிகாவை மீட்க அனைவரும் உதவிட வேண்டும்” என வருத்தத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பொலிசார் விரைந்து செயல்பட கேரள அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொலிசாரும் தாங்கள் முழு வீச்சில் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.