முல்லைத்தீவில் இளம் நிறைமாத கர்ப்பிணித்தாயும் பிரசவித்த குழந்தையும் உயிரிழப்பு !

image_pdfimage_print
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் நேற்று உயிரிழந்துள்ளார்.
கர்ப்பிணியாக இருந்த குறித்த இளம் பெண் கடந்த 11ஆம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்றை பிறசவித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் கோமா நிலை அடைந்துள்ளார். இதனால் குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் குறித்த குழந்தை அன்று இரவு 7.00 மணியளவில் உயிரிழந்துள்ளது. அத்துடன், குறித்த பெண் அன்றைய தினம் இரவு யாழ். போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலன்னின்றி நேற்று குறித்த இளம் தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.