ஆந்திரா மற்றும் தமிழக மாநிலங்களில் குழந்தை உள்ளிட்ட எட்டுப்பேரை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதி ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலம், திகவாகொத்தபல்லி கிராமம் அருகே வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோளிங்கர் அருகே மான்தாங்கல் கிராமத்தை சேர்ந்த 42 வயதான முனிசாமி என்ற இலங்கை அகதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குழந்தை உள்ளிட்ட எட்டுப்பேரை மிகவும் கொடூரமான முறையில் கல்லால் தாக்கியும், கடித்து குதறியும் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நபர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக தமிழ் நாட்டில் மாத்திரம் 28 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.