ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்.

image_pdfimage_print
இயக்குனர் பாலா அவர்களின் படங்கள் என்றாலே தனித்துவமாக இருக்கும். வித்தியாசமாக எடுக்கும் அவரா இப்படத்தை இயக்கினார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பாலாவின் நாச்சியார் படத்தை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர்.

ஜோதிகாவின் மாஸ் நடிப்பு, ஜி.வி. பிரகாஷின் முற்றிலுமான மாறுபட்ட வேடம் என படத்தின் சில விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தது. படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பையும் பெற்று வருகிறது.
தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 31 லட்சம் வசூலித்துள்ளது. படத்தின் வரவேற்பை பார்க்கும் போது வரும் நாட்களில் படம் அமோக வசூல் செய்யும் என கூறப்படுகிறது.