2018 பத்ம விருதுகள்: முதல் நபராக விருது பெற்ற ‘இசைஞானி’

2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி வருகிறார்.
இந்த பத்ம விருது விழாவில் முதல் நபராக இசைஞானி இளையராஜா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையிலிருந்து பத்ம விபூஷன் விருதினை பெற்றுக் கொண்டார்.
இளையராஜா தவிர தமிழகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் அரவிந்த் பாரிக், தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, யோகா கலைஞர் நானம்மாள் உள்ளிட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.
விழாவில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும் குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்பட்டன.