‘கோலமாவு கோகிலா’ படத்தில் பெண் வேடத்தில் அனிருத்!!

image_pdfimage_print

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ஏற்கெனவே சில அல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார்.
இந்த நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற ஒளிப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்காக அனிருத் பெண் வேடம் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்ரார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது.
இந்தப் படத்தில் அனிருத் நடிக்க விருக்கிறார். அதில் நயன்தாராவிற்கு ஜோடியாக வருவது போல் இருக்குமாம். தன்னை விட 10 வயது குறைவான அனிருத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க விருக்கிறார்.