முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பங்குனித்திங்கள் மற்றும் ஆலயத் திருவிழாக்கள் நடைபெறும் காலத்தில் வற்றாப்பளை ஊடாக வந்து செல்லும் பேருந்துக்கள் வற்றாப்பளை ஆலய வளாகத்தின் வீதி ஊடாக பயணிக்கவேண்டும் என்று ஆலயத்துக்கு வந்து செல்லும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிக நீண்ட இடங்களில் இருந்துவந்து வற்றாப்பளை ஆலயச் சந்தியில் இறங்கி 2கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றே அம்மன் ஆலயத்துக்கு செல்லவேண்டியுள்ளது. எனவே, வற்றாப்பளை ஊடாக செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒருவழியாகவேனும் வற்றாப்பளை அம்மன் ஆலய வளாகத்துக்கு அருகில் உள்ள வீதியூடாக பயணிக்குமாயின் நீண்ட தூரம் நடத்து செல்லவேண்டிய தேவை இல்லை என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழமை நாள்களில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவான பக்தர்கள் ஆலயத்துக்குச் சென்று வருகின்றபோதும் சிறப்பான நாள்களிலாவது இவ்வாறான ஏற்பாடு இருக்குமாக இருந்தால் சிறப்பாக அமையும் என்றும் தூர இடங்களில் இருந்து ஆலயத்துக்கு பேருந்தில் வந்து செல்லும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.