விஜய் வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான், வேறு எந்த நடிகருக்கும் இல்லை, இவரே சொல்லிவிட்டாரா?தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உலகம் முழுவதும் உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் மெர்சல் ரூ 250 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே.
தற்போது பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் என்பவர் ஒரு பேட்டியில் விஜய் படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதில் ‘விஜய்யை வைத்து படம் எடுத்தாலே ரூ 15 கோடி லாபம் தான், இது வேறு எந்த நடிகருக்கும் இல்லை.
இது மட்டுமின்றி அவர் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வருகின்றார், சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுக்கின்றார், அவர் மேல் ஏதாவது ஒரு புகார் வருகின்றதா?’ என ராஜன் கூறியுள்ளார்.