முல்லைத்தீவில் ஆழ்கடல் நோக்கி பறந்து சென்ற இராட்சத பறவை!

முல்லைத்தீவு ஆழ்கடல் நோக்கி இராட்சத பறவை ஒன்று இன்று மாலை நேரத்தில் பறந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்கரையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் தென்பட்ட இந்த இராட்சத பறவை வட-கிழக்கு கடல் நேராக ஆழ்கடல் நோக்கி பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு பாதகமான காலநிலை மாற்றங்களினால் மீனவர்களின் தொழில் பாதிப்படைந்திருந்தது.
இந்த நிலையில் இன்று பறந்து சென்ற இந்த இராட்சத பறவை தொடர்பில் மீனவர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் நீங்கி கடல் நிலை சீராக வேண்டும் என்றும் மீனவர்களின் தொழில் மேம்படவேண்டும் என்றும் அண்மையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் ஒன்று கூடி இறைவழிபாடு ஒன்றினையும் செய்திருந்தனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு பெருங்கடல் மீனவர்களின் தொழிலில் தற்பொழுது பாதிப்புக்கள் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.