முல்லைத்தீவில் கடந்த 8 வருடத்தில் நடந்த பயங்கரம்!

image_pdfimage_print

முல்லைத்தீவில் மிக வேகமாக நில ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் இன்று இடம்பெற்று வரும் அமர்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
போர் காலத்தில் ஒரு விகாரையும் இல்லாத இடத்தில் தற்போது விகாரைகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் பௌத்த விகாரைகள் 13 அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் சிங்கள மயமாக்கலை எதிர்த்து ஒருநாள் கவனயீர்ப்பு முன்னெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவில் கடந்த 8 வருடத்தில் 13 விகாரைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி, கொக்கிளாயில் அம்மன் கோவில் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதன் போது மூன்று கோரிக்கைகளையும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..