முல்லைத்தீவில் இறந்த மனைவிக்காக கணவனின் செயற்பாடு! பலரின் கண்களில் கண்ணீர்!!!

முல்லைத்தீவில் கணவன் ஒருவரின் செயற்பாடு பலரின் இதயங்களை கனக்க செய்துள்ளது.

இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தனது மனைவிக்காக நினைவாலயம் அமைந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஆ.சுந்தரலிங்கம் என்பவர், தனது வீட்டில் மனைவிக்காக நினைவாலயம் அமைத்து வழிபட்டு வருகிறார்.

2009 ஆண்டு முள்ளிவாயக்கால் பகுதியில் இடம்பெற்ற போரின் போது படுகாயமடைந்த அவரது மனைவி, போதிய மருத்துவ வசதிகள் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இறுதிக்கட்ட போர் முடிவடைந்து ஒன்பது வருடங்களை கடந்துள்ள நிலையில், தனது மனைவிக்காக நினைவாலயம் அமைந்துள்ள அஞ்சலி செலுத்தும் கணவனின் செயற்பாடு இதயங்களை கனக்கச் செய்வதாக அந்தப்ப பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.