முல்லைத்தீவில் அசம்பாவிதம்; பரிதாபமாக பலியான 14 வயது சிறுவன்!

image_pdfimage_print
முத்துஐயன்கட்டு ஜீவநகர் அம்மன் கோவில் பகுதியில் 14 வயது மணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துஐயன் கட்டு இடதுகரை அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்கும் பி.தினேஸ்குமார் என்ற 14 வயது மாணவனே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று (14) பிற்பகல் வீட்டு முற்றத்தில் நின்ற சிறுவன் மீது மீன்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. உடனடியாக ஒட்டிசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு; முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவனின் தந்தை இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்துள்ளதுடன் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.