மாங்குளத்தில் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணம் கொள்ளை!!!

இன்று அதிகாலை மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைத்தில் உள்ள ஊழியரை மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
வான் ஒன்றில் வருகை தந்த இருவா், எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மாங்குளத்தில் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணம் கொள்ளை!!!