முல்லைத்தீவில் இளைஞன் ஒருவரின் உடலம் கண்டு எடுக்கபட்டது!


முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் 23.05.18 அன்று மாலை கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 அகவையுடைய வரதராஜா சதாநிசன் என்ற இளைஞனை அன்று மாலைவரை காணாத நிலையில் தந்தையார் தேடிதிரிந்துள்ளார்.

இதேவேளை செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் உந்துருளி ஒன்று மாலை வரை நின்றுள்ளதை அவதானித்த அருகில் உள்ள அயலவர்கள் முல்லைத்தீவு பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலீஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று உந்துருளியினை பார்வையிட்டுள்ளதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துள்ளார்கள் இதேவேளை குறித்த இளைஞனின் தந்தையாரும் கிராமமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

தந்தையார் உந்துருளியின் இலகத்தினை வைத்து தனது மகனின் உந்துருளி என உறுதிப்படுத்தியுள்ளார் இதனையடுத்து தனது மகன் என தந்தையார் பொலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து செல்வபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.