முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மாகாணசபையின் ஏற்பாட்டில்தான் நடக்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் 33 மாகாண சபை உறுப்பினர்களும் தலா ஏழாயிரம் ரூபா கொடுத்துள்ளார்கள்.
இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தினை திரும்ப தருமாறு வடமாகாணசபை
எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கோரியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்கள் செய்துள்ளார்கள் அவர்களிற்கு புலம்பெயர் அமைப்பான தலைமைச்செயலகம் என்ற அமைப்பு தாராளமாக பணம் அனுப்பி இருந்தது.
நினைவேந்தலுக்கான அனைத்து ஒழுங்குகளையும் வடமாகாணசபையே செய்ய உடையாரின் திருவிழாவில் சடையார் வாணம் விட்ட கதையாக பல்கலைக்கழக மாணவர்ளின் செயற்பாடு அமைந்துள்ளது.
இன்னிலையில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யாததால் தம்மால் ஒதுக்கப்பட்ட பணம் செலவிடப்படாமல் இருக்கும் என்று கருதியே அவைத்தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.