முல்லைத்தீவில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!!

முல்லைத்தீவு மூங்கிலாற்று பகுதியில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முல்லைத்தீவு உடையார் கட்டு மூங்கிலாற்று பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மூங்கிலாற்றுப் பகுதியில் சிறிய வணிக நிலையம் ஒன்றை நடத்திவரும் 65 அகவையுடைய சிவலிங்கம் என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இவரை உடனடியாக மீட்ட அயலவர்கள் மூங்கிலாறு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கிருந்து மேலதி சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.