வற்றாப்பளை சென்றவர்களிடம் வழிப்பறி -குழுவை வளைத்துப் பிடித்த இளைஞர்கள்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்குச் சென்று  வாகனத்தில் வீடு  திரும்பியவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்தனர் எனக் கூறப்படுகிறது.
வவுனியா, பரந்தன் ஊடாக இன்று காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதனை அவதானித்த கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குழுவைச் சேர்ந்த இருவரை மடக்கி பிடித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.