கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய தாயக யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்பு!!!

ஈழத்து யுவதி பெல்ஜியத்தில் மர்மமான முறையில் மரணம்!
வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,
வவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும், தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்விலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக தெரியவருகின்றது.
தற்கொலை செய்துள்ளாரா..? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.