முள்ளியவளை பகுதியில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!!!


முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில்  பல்கலை மாணவி ஒருவர் தூக்கில்தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தைசேர்ந்த 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற பல்கலை மாணவி ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சம்வபத்தினை தொடர்ந்து உறவினர்களால் மீட்கப்பட்ட குறித்த யுவதி மாவட்ட மருத்துவ மனை கொண்டுசென்றுள்ளார்கள் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மாணவியின் தற்கொலை குறித்து முள்ளியவளை பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள் குறித்த மாணவியின் உடலம் மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.