புதுக்குடியிருப்பு பகுதியில் பலபெண்களின் கருக்களை சட்டவிரோதமாக கலைத்து தொழில் செய்துவந்த பெண் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த 05 ஆம் திகதி சுதந்திரபுரம் கொலனி பகுதியில் சிறுமி ஒருவர் கர்பமாக்கப்பட்ட சம்பவத்தினை வைத்து சிறுமியின் உறவினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தினை வைத்து புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய உதவி பொலீஸ் அதிகாரி எம்.பண்டார தலைமையிலான குழுவினர் இதற்கான விசாரணைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.
அவர்கள் குறித்த சிறுமியிடம் நடத்திய விசாரணையின்போது சிறுமியின் வயிற்றில் கருத்தரித்த விடயம் தொடர்பில் அதனை கலைப்பதற்காக சிலரை நாடியள்ளார்கள். அவர்கள் தொடர்பான விபரங்களை சிறுமி பொலீஸாரிற்கு தெரிவித்துள்ளதை தொடர்ந்து பொலீஸார் மேற்கொண்ட புலன் விசாரணைகளிலும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலும் வள்ளிபுனம் காளி கோவிலடிப்பகுதியில் உங்கா என்ற பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்படும் பெண்ஒருவர் சட்டவிரோத கருக்கலைப்பினை தொழிலாக செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இன்னிலையில் 07.06.18 அன்று குறித்த பெண்ணினை கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலீஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது கடந்த மாதம் கோம்பாவில் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவரும் குறித்த குற்றாவாளியிடம் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான பெண்கள் சட்டவிரோ கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளமை குறித்த குற்றவாளியூடான தகவல்களில் தெரியவந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
இன்னிலையில் கைதுசெய்த குறித்த சட்டவிரோத கருக்கலைப்பு குற்றாவாளியினை 08.06.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள் இதன்போது அவரை எதிர்வரும் 11.06.18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத கருக்கலைப்பு குற்றவாளி மீது ஏற்கனவே சட்விரோத கருக்கலைப்பு தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று இடம்பெற்று வருவதாகவும் புதுக்குடியிருப்பு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.