மின்னஞ்சல் (E-mail) பயன்படுத்துபவரா நீங்கள்? அவசியம் இதை படியுங்கள்!!!

இணையத்தளம் ஊடாக இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் வர்த்தகர்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணணி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வோர், பொருட்களை கொள்வனவு செய்யும் போது கொடுப்பனவு செய்யும் கணக்குகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் தொடர்பான தகவல் உறுதி செய்த பின்னர் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல்கள் ஊடாக வரும் மோசடியாளர்களினால் வழங்கப்படுகின்ற கணக்கு இலக்கங்கள் மூலம் நிதி மோசடி செய்யப்படுவதாக இலங்கை கணணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா மேலும் தெரிவித்துள்ளார்.