லண்டனில் வாள்வெட்டு! நடப்பது என்ன?

லண்டனில் வெவ்வேறு இடங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற 3 கத்திகுத்து தாக்குதல்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். 20 வயதான இளைஞனும் 17 வயது சிறுவனுமே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்கு லண்டனிலுள்ள நோர்தோல்ட் (Northolt) என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திகுத்து தாக்குதலிலேய 20 வயதான இளைஞர் படுகாயமடைந்துள்ளதுடன் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் வயது மற்றும் கத்திகுத்தை மேற்கொண்டமைக்கான காரணம் என்பன இதுவரை அறியப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேற்கு லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்திகுத்துக்கு இலக்கான 17 வயது சிறுவன் Crescent, Harrow இற்கு அருகிலிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த மூன்றாவது நபர் தெற்கு லண்டனிலுள்ள லம்பத் பகுதியிலிருந்து காயங்களுடன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சனிக்கிழமை வடக்கு லண்டனில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் 30 வயதான நபர் உயிரழந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் லண்டனில் இடம்பெற்று வரும் இந்த தொடர் கத்திகுத்து தாக்குதல்களில் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.