நெடுங்கேணிப் பகுதியில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது!!

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் தொல்பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று அதிகாலை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்கள் நெடுங்கேணி, பட்டனைக்குளம் வனப்பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததுடன், அவர்களிடம் இருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன், நெடுங்கேனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.