பிரான்சில் இறந்த நபர் இலங்கையில் இருப்பதாக கூறி பல கோடி பணமோசடி!!!

பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் பாரிய பண மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது
பிரான் பாரிஸ் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் தனிநபர் ஒருவருடையது. அதனை நிர்வாகம் அமைத்து குறிப்பிட்ட சிலர் செயற்படுத்தி வருகின்றார்கள்.
இன்னிலையில் இந்த ஆலயத்தின் நிர்வாகத்திற்கு கடனாக பணம் கொடுத்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலீஸ் நிலையத்தினை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுமக்களிடம் கடன் பெற்று பணமோசடி செய்து அங்கிருந்து இலங்கையில் உள்ள பினாமிகளின் பெயரிற்கு அனுப்புவதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் இவர்களின் பினாமி பணபரிமாற்றம் இலங்கையிலும் பிரான்சிலும் பொலீசிற்கு அம்பலமாகவுள்ளதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்சில் இறந்த நபர் ஒருவர் இலங்கையில் உயிருடன் இருப்பதாக பணப்பரிமாற்றம் கடந்த இருபது ஆண்டுகளாக பல நூற்றுக்கணக்கான கோடி பணங்கள் பரிமாறப்பட்டுள்ளது.
இன்னிலையில் கடனினை கொடுத்த நபர் ஒருவர் நிர்வாகிகளால் ஏமாற்றப்பட்டுள்ளார். இவர்கள் செய்யும் பணமோசடிகள் தொடர்பில் பிரான்ஸ் பொலீஸ் நிலையத்தினை குறித்த பணம் கொடுத்த நபர் நாடியுள்ளார்.
இந்த ஆலய நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க நினைக்கும் ஏனைய நபர்கள் விளிப்பாக இருக்குமாறு வேண்டுகின்றோம்.