முல்லைத்தீவில் வடமாகாண ஆளுனரால் 7 பேரின் காணிப் பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நடைபெற்றுள்ளது.
வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரோ தலைமையில் 13.06.2018 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருபது காணி முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பன்னிஇரண்டு பேர் விசாரணைக்கு சமூகமளித்துள்ளார்கள் இதில் 7 பேரின் காணிப்பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 22 பேர் புதிதாக தங்கள் காணி முறைப்பாட்டினை தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் சமூகம் அளிக்கப்படாத காரணத்தால் ஏனைய காணிப்பிரச்சனைகளும் வடமாகாண ஆளுனரினால் தீர்வுகள் காணப்படமுடியாதென தனது உரையில் தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் என்.தயாரட்ண,மகாவலி அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் பி.ஜே.குணபால உள்ளிட்ட பிரதேச காணி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.