புழல் சிறையில், கையடக்க தொலைபேசி வைத்திருந்த இலங்கை கைதியிடம், பொலிஸார் தீவிர விசாரணை!

புழல் சிறையில், கையடக்க தொலைபேசி வைத்திருந்த இலங்கை கைதியிடம், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர், குமரன், 35. இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வழக்கில் கைதாகி, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், சிறையில் உள்ள குளியலறையில், குமரன் கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த சிறைக்காவலர்கள் அவரிடமிருந்த கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் புழல் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.