முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கொண்டு முகநூல் ஊடாக நோர்வே நாட்டு பெண் ஒருவரை நண்பியாக இணைந்து அவரிடம் நூதன முறையில் 32 இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த நபரினை தேடி குறித்த பெண் நோர்வேயில் இருந்து இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வந்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த நபரினை தேடி பாரிய முயற்சிகள் எடுத்து தனது பணத்தினைக் கேட்டுள்ளார் அதற்கு அவர் மறைமுகமாக இருந்து கொண்டு முகநூல் ஊடாக பொய்யான தகவல்களை ஏமாற்றும் முறையில் தெரிவித்து வந்துள்ளார்.
இன்னிலையில் குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொலீஸ் நிலையத்தினை நாடியுள்ளார் அவர்களின் ஆலோசனை படி குறித்த பண மோசடி தொடர்பான பிரச்சனைகளை கையாழும் பிரிவான விசேட மாவட்ட குற்றவிசாரணை பிரிவு விசாரணையை மேற்கொண்டது.
இவர்களிடம் குறித்த பெண் சென்று தான் பணம் அனுப்பியமைக்கான ஆதாராம் மற்றும் குறித்த மோசடிக்காரன் உள்ள முகவரி என்பனவற்றை கொடுத்துள்ளார் முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்றவிசாரணைப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தில் குறித்த நபர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 14.06.18 அன்று அவரின் இருப்பிடத்திற்கு சென்று விசேட மாவட்ட குற்றவிசாரணைப்பிரிவு பொலீஸார் வீட்டிற்கு சென்று அவரை கைதுசெய்துள்ளார்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் முதற்கட்டமாக அவர் பணத்தினை பெற்றது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் இன்னிலையில் அவரை 15.06.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முகநூல் ஊடாக அதிகளாவன 32 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.