இலங்கை அகதிகளுக்கு அமெரிக்காவில் குடியுரிமை!

அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்ற சில இலங்கையர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வுகள் பால்ட்டிமோர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளைச் சேர்ந்த 28 பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.