தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முல்லைத்தீவில் மாவை தலைமையில் நடைபெற்றுள்ளது.

image_pdfimage_print
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 16.06.18 அன்று முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜயசிங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன், தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மத்தியகுழுவில் அங்கம் வகிக்கும் வடக்கு மற்றும் கிழக்கினை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாணசபை உறுப்பினர்கள் கட்சி அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்ட கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் காலை 9.00 மணிக்கு தொடங்கி மதிய உணவுடன் மாலை 5.00 மணிவரை முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் பல விடயங்கள் சம்மந்தமாக ஆழமாக ஆராயப்பட்டு சிந்திக்கப்பட்டு பலமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சிறப்பாக அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கட்சி அடைந்துள்ள சிறிதளவு பின்னடைவு சம்மந்தமாக ஆராய்ந்து கட்சியை புனரமைக்க என்ன செய்யவேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டு கட்சி கிளைகள் அமைக்கப்பட்டு கட்சியினை பலப்படுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதேவேளை மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் சம்மந்தமாக ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு அவை நிறைவேற்றுவதற்கு ஆகவேண்டிய ஒழுங்குள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.