லண்டனில் ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!!

image_pdfimage_print

பிரித்தானிய தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லோபோரோக் ரயில் நிலையத்தில் ரயில் மோதி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக இன்று (திங்கட்கிழமை) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தொடர்பான விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் மூவரும் ரயில் மோதி இறந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்ற முழுமையான விபரங்கள் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.