களனி பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவில் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த மாணவனொருவன், மின்சாரம் தாக்கி, உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் கெப்பிதிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவனே, இவ்வாறு பலியாகியுள்ளார்.
பல்கலைக்கழக வளாகாத்திலிருந்து மாரிமா மரத்தில் (அம்பரெலா) காய்களைப் பிடுங்குவதற்காக, இரும்பு பொல்லொன்றை எடுத்து, மரத்தில் அடித்துள்ளார். இதன்போது, மரத்துக்கருகில் இருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில், இரும்புப் பொல் மோதுண்டமையால், குறித்த மாணவன், சம்பவ இடத்திலேயே, உடல் கருகி பலியானர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.