முல்லைத்தீவில் இடம்பெற்ற இருவேறு கோர விபத்துக்கள்!

19.06.18 முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மாவட்ட மருத்துவமனைக்கு முன்பாக முச்சக்கரவண்டியும் உந்துருளியும் மோதிக்கொண்ட விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் படுகயாமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியும் உந்துருளியும் முழுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது இந்த விபத்து குறித்து முள்ளியவளை பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

இதேவேளை இன்று 19.06.18 மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதியில் டிப்பரும் உந்துருளியும் மோதிக்கொண்ட விபத்தில் உந்துருளியில் பயணித்த இளைஞன் படுகாமடைந்த நிலையில் ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார் இந்த விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்