வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிணற்றிலிருந்து இன்று (20) மீட்கப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் கிங்ஸ் விழையாட்டுக்கழகத்தின் மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றில் சடலமாக காணப்பட்டவர் சத்தியசீலன் டிலக்சன் வயது (22) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா பொலிசார் கிணற்றிலிருந்து சடலத்தை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலமாக காணப்படட இளைஞனின் பாதணிகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் விட்டில் சண்டையிட்டு சென்றதாகவும் குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.