வவுனியாவில் இளஞைன் சடலமாக மீட்பு

வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியிலிருந்து இன்று மாலை இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மெலும் தெரியவருகையில், வவனியா கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த அன்ரன் உதயகுமார் அனோஜன் 22வயதுடைய இளைஞன் காலையில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும் இன்று பிற்பகல் குறித்த இளைஞனைக்காணவில்லை என்று தேடியபோது வீட்டிற்குப்பின்புறமாக தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இளைஞனின் சடலம் தற்போது மருத்துவப்பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இளைஞன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள். 
இதேவேளை வவுனியா வேப்பங்குளம் பகுதியிலிருந்து நேற்று இளைஞன் ஒருவருடைய சடலமும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.