முல்லைத்தீவில் வெளிநாட்டு சக்திகளின் பின்னணியில் பாரிய கிளைமோர் தாக்குதல் நடவடிக்கை!

22.06.18 அன்று அதிகாலை வேளை ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்பு  வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை பொலீஸார் மறித்து சோதனை செய்தவேளை அதில் பெருமளவான வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினைகளுடன் இருவரை கைதுசெய்துள்ளதுடன் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் .
ஒட்டுசுட்டான் பகுதியில்இருந்து முச்சக்கர வண்டி ஒன்று அதிகாலை வேளை புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த போது பேராற்று பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டியினை சோதனை செய்துள்ளார்கள் இதன்போது அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் இருவர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
முச்சக்கர வண்டியினை சோதனை செய்தபோது பெருமளவான கைக்குண்டுகள்,வெடிபொருட்கள் (கிளைமோருக்கு பயன்படுத்தப்படும்) புலிக்கொடி ஒன்று விடுதலைப்புலிகளின் சீருடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களை ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். முதற்கட்ட விசாரணைகளின் போது கைதான இருவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பேராற்றுப்பகுதியில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
மேலும் நாயாற்று பகுதியில் தப்பியோடிய நபர் பொலிஸ் மற்றும் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கைதான நபர்கள் குறித்து பயங்கரவாத விசாரணைப்பிரிவின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.