வடக்குப் பட்டதாரிகள் தொடர் தொழில் உரிமைப் போராட்டம்!

image_pdfimage_print
எந்தவொரு பட்டதாரியையும் பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சையை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள், தொடர்ச்சியான தொழில் உரிமைப் போராட்டத்தை இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பட்டாரிகளில் 5 ஆயிரம் பேருக்கு அடுத்த மாதமும் மேலும் 15 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதமும் அபிவிருத்தி உதவியாளர் நியமனம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 15 ஆயிரம் பேரை நியமிப்பதற்கு மீளவும் நேர்முகத் தேர்வு நடத்தத் திட்டமிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையுமான தொழில் உரிமைப் பேராட்டத்தை ஆரம்பித்தது.