அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலம்!

வாழைச்சேனை – நாசிவன்தீவு காட்டுப் பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் 35 வயது மதிக்கத்தக்க ஒருவராக இருப்பதாகவும் தெரிவித்த பொலிஸார், இச் சடலத்தின் அருகில் இருந்து இரண்டு கையடக்க தொலை பேசிகளையும் மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இச் சடலம் அவ் விடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளபோதிலும் எவரும் உரிமை கோரவில்லை என்பதால் மீட்கப்பட்ட தொலைபேசிகளைக் கொண்டு அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளைபொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தினை அடையாளம் காணும் பொருட்டு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.