ஒட்டுசுட்டான் பகுதியில் பலா மரத்தில் ஏறியவருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!

image_pdfimage_print
ஒட்டுசுட்டான் பகுதியில் பலா மரத்தில் இருந்து வீழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் சிவனகர் பகுதியில் 23.06.18 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..
சிவனகர் அரைஏக்கர் பகுதியில் வசிக்கும் 45 அகவையுடைய கிட்டினன் என்பவர் அவரது வீட்டில் நிக்கும் பிலா மரத்தில் பலா காய் பறிப்பதற்கு ஏறியுள்ளார் .
இதன்போது அவர் தவறிவீழ்ந்த நிலையில் ஒட்டுசுட்டான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவ மனை கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு உடலம் 24.06.18 அன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.