மருந்தகங்கள் சிலவற்றின் மீது பிராந்திய சுகாதார பணிமனையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வர்த்தகர்கள் நாளை பெரும் கவனயீர்ப்பு ஆா்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைக்கு முன்பாக உள்ள ஒரு மருந்தகம் மற்றும் புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு மருந்தகம் மற்றும் முல்லைத்தீவு நகரில் இரண்டு மருந்தகங்கள் இதுவரை சட்ட ரீதியான பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் பிராந்திய சுகாதார பணிமனையினரால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மருந்தகங்களின் உரிமையாளர்கள் கடந்த காலங்களில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும், பிராந்தி சுகாதார பணிமனையினர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பதிவு நடவடிக்கைக்கு இழுத்தடிப்பு செய்து பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நாளை நடைபெறவுள்ளது இந்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு வருகை தரும் வடமாகாண முதல்வர் மற்றம் அரசியல்வாதிகளுக்கு மருந்தக உரிமையாளர்களின் நியாயமான செயற்பாட்டினை எடுத்துக்காட்டியும், பிராந்திய சுகாதார பணிமனையின் அசமந்த போக்கான நடவடிக்கையினை கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.