விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்!!

image_pdfimage_print
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 5 நாடுகளும்  விடுதலைப் புலிகளை அழிக்க உதவின. இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைத்தது.
விடுதலைப்புலிகளை அழிக்கும் போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதாக பன்னாட்டு  சமூகம் வாக்களித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு இனப்பிரச்சினை தீர்விற்கு முயற்சிக்கவில்லை. தனது பொறுப்பில் இருந்து பன்னாடு தவற முடியாது.
தமிழ் மக்கள் ஒற்றுமையின் மூலமாக, இந்த நாட்டின் ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் வல்லமையையுடையவர்கள் என்பதை 2015 ஆம் ஆண்டில் நிரூபித்துள்ளோம். அந்த ஒற்றுமை தொடர வேண்டும். சில பிரச்சனைகள் இருக்கலாம். அதை நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். என்றார்.