முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

ஒட்டுசுட்டான் பகுதியில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!
கடந்த 21 ஆம் திகதி ஒட்டுசுட்டான் பகுதியில் டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் சின்னச்சாளம்பன்  ஒட்டிசுட்டான் பகுதியினை சேர்ந்த செ.அலக்ஸ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சின்னச்சாளம்பனை சேர்ந்த குறித்த இளைஞன் ஓடிய பெறுமதியான உந்துருளி முற்றுமுழுதாக சேதமடைந்த நிலையில் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக உந்துருளியினை செலுத்தியமையே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.