முல்லைத்தீவு மாவட்ட மருந்தகங்கள் ஊடாகவே தெற்கிற்கு அதிகளவான உடலுறவு போதை மாத்திரைகள் விநியோகம்!

முல்லைத்தீவு மாவட்ட மருந்தகங்கள் ஊடாகவே தெற்கிற்கு அதிகளவான உடலுறவு போதை மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் குற்றம் சாட்டியுள்ளார். 25.06.18 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் மருந்தாளர்கள் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம் ஏன் முல்லைத்தீவிற்கு வந்தனி என்று கேட்காதீர்கள் எங்கோ ஒரு இடத்தில்தான் இதன் நடவடிக்கையினை தொடங்கவேண்டும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது அதற்கமைய நடவடிக்கையினை மேற்கொண்டேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மருத்துவமனையில் ஊழியர்கள் நோயாளர்களிடையே தொடர்பாடல் பிழையாக காணப்படுகின்றது என்றும் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளர்களிடம் அங்கு இருக்கின்ற ஊழியர்கள் மருத்துவமனையில் இருக்கின்ற மருந்துகளை விட வெளியில் மருந்தகங்களில் நல்ல மருந்து இருக்கின்றது அங்கு வாங்குங்கள் என்றும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற மருந்தகங்கள் ஒன்றும் எட்டு ஆண்டுகளாக பதிவுசெய்யப்படவில்லை  என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மருந்தகத்தினை நடத்துபவர்களுக்கும் மருத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை கருக்கலைப்பிற்கான மருந்துகள் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் ஒரு தாய் சட்டவிரோத மருந்தினை வைத்து கர்ப்பப்பை வெடித்து உயிரிழந்துள்ளார் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு அம்மா கருக்கலைப்பிற்காக வில்லைகளை பாவித்து குருதிப்பெருக்கில் சிக்கி எங்களிடம் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
நான் மருந்தகத்தில் நிக்கும் போது வயோதிபர் ஒருவர் அன்ரிபயேரிக் என்ற மருந்து மூன்று மாதமாக பாவித்துள்ளார்  உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அரசாங்கம் வரையும் செல்கின்றீர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக இவ்வாறு உயிரிற்கு தாக்கம் உள்ள மருந்துகளை மருந்தகங்கள் விநியோகம் செய்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலைநேரத்தில் தாம்பத்திய உறவிற்காக உற்சாகப்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்ய அரசாங்கம் அங்கிகரித்துள்ள நிலையில் மருத்துவரின் சான்றுடன்தான் அவை பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்துதான் அதிகளவான மாத்திரைகள் வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளன தென்பகுதிக்கு இது கடத்தப்படுவதாக முறைப்பாடும் வந்துள்ளது. மருத்துவதுறை பலசரக்கு கடையல்ல குறித்த கடைகளை இயங்கவிடவேண்டும் என்று அபிவிருத்திக்குழுக்கூட்டத்திற்கு கூட அதிகாரம் இல்லை அவ்வாறு இருந்தால் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் இருந்து ஒரு கடிதம் தாருங்கள் விடுகின்றேன்.
இது வவுனியாவிலும் நடக்கும், மன்னாரிலும் நடக்கும் கிளிநொச்சியிலும் நடக்கும் யாழ்ப்பாணத்திலும் நடக்கும் மருத்துவதுறையினை தவறாக பயன்படுத்துவதை ஒருநாளும் அனுமதிக்கமுடியாது.
தேவையில்லாமல் சமூகத்தினை பகைத்தால் அரசியலில் எனக்கு நட்டம் என்று தெரியும் முல்லைத்தீவு எனக்கு தேவை இல்லை என்று நினைக்காதீர்கள் நான் மன்னார் தான் ஆனால் திருமணம் செய்தது முல்லைத்தீவில் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்கள் காண்டாக கருத்து தெரிவித்துள்ளார். இருந்தும் இந்த மருந்து கடைகளுக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியபோதும் மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திணைக்களம் ரீதியான சட்டதிட்டங்கள் இருப்பதால் என்ன முடிவினை எடுக்கலாம் சட்டவரையறைக்குள் இந்த பிரச்சனையினை எவ்வாறு தீர்க்கலாம் என்று செயற்பட காலஅவகாசம் தேவைப்படுகின்றது. கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.